வெளிநாட்டு கரன்சியுடன் வாலிபர் கைது... மலேசிய கடத்த முயன்றபோது சிக்கினார்!

By vinoth kumarFirst Published Nov 9, 2018, 1:58 PM IST
Highlights

திருச்சியில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு, வெளிநாட்டு கரன்சியை கடத்த முயன்ற வாலிபரை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அந்த பணம் ஹவாலா பணம் என தெரியவந்தது.

திருச்சியில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு, வெளிநாட்டு கரன்சியை கடத்த முயன்ற வாலிபரை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அந்த பணம் ஹவாலா பணம் என தெரியவந்தது.

திருச்சியயில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பயணிகள் விமானம் இன்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, அனுப்பி கொண்டிருந்தனர். 

அபப்போது, திருச்சியை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபர், மலேசியாவுக்கு சுற்றுலா பயணியாக செல்ல வந்தார். அவரது உடமைகளை ஸ்கேன் மூலம் சோதனை செய்தபோது, அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது தரிந்தது. 

இதையடுத்து அதிகாரிகள், அவரிடம் இருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் மடித்து வைக்கப்பட்ட ஆடைகளுக்கு இடையே கட்டு கட்டாக அமெரிக்க கரன்சியை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து, கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபர் விஜயகுமாரை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். அதில், கணக்கில் வராத ஹவாலா பணம் என தெரியவந்தது. இதையடுத்து அந்த கரன்சிகளை கொடுத்து அனுப்பியது யார், யாருக்கு கொடுக்க இருந்தார் என திவிரமாக விசாரிக்கின்றனர்.

click me!