அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தார்மீக ரீதியாக சரியல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையிடம் சிக்கினார். தீவிர விசாரணைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் கிடக்கிறார். இருப்பினும் அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார்.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாமல் அமைச்சராகத் தொடர்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக இன்னமும் இருக்கிறார் என விளக்கம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
டாஸ்மாக் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் 1 மாதத்தில் முற்றுப்புள்ளி - அமைச்சர் முத்துசாமி தகவல்
இந்த வழக்குகள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இன்று இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அப்போது, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தார்மீக ரீதியாக சரியல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதா, வேண்டாமா? என்பது குறித்து முதல்வர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்து, வழக்குகளை முடித்து வைத்துள்ளனர்.
பா.ஜ.க.வுக்கு 'இந்தியா' என்ற சொல்லே கசக்கிறது... மத்திய அரசை விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்