புழல் சிறைத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வந்த செந்தில் பாலாஜி!

Published : Jun 15, 2023, 10:23 AM IST
புழல் சிறைத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வந்த செந்தில் பாலாஜி!

சுருக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறை  அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளார்

தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி, சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, அவருக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கஒல் செய்யபப்ட்டது., அதன் மீதான தீர்ப்பு இன்று வரவுள்ளது. பிறகு, காவிரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. காவிரி மருத்துவமனையிலும் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்தபோது மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தார். அவரை பார்க்க பலருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருந்த ஓமந்தூரார் மருத்துவமனை முழுவதும் சிஆர்பிஎஃப் வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறை  அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளார். செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, வருகிற 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

உதயநிதி, சபரீசனுக்கு செக் வைக்கும் அதிமுக..! வருமான வரித்துறை, அமலாக்கத்துறைக்கு பறந்த புகார் கடிதம்

இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் வைக்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைத்துறை அதிகாரிகளின் கட்டுபாட்டில் ஓமந்தூரார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதால், அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்வையாளர்கள் பார்க்க  புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு அனுமதிக்கப்படுவார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ration Card Cancellation: அக்டோபர் 1 முதல் லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து.. உங்க கார்டு தப்புமா?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?