
செங்கோட்டையில் இருந்து நெல்லை செல்லும் ரயிலில், அம்பை ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினர்.
செங்கோட்டையில் இருந்து நெல்லை வரும் பயணிகள் ரயில் நேற்று இரவு 7 மணிக்கு அம்பை ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயிலின் கடைசியில் இருந்து 3வது பெட்டியில் பூட்டிக் கிடந்த கழிப்பறையில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த பெட்டி முழுவதும் புகை பரவியது.
புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டதும், ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். தீ வந்த பெட்டியில் உள்ள கழிவறையை திறந்து பார்த்தபோது அங்கு பழைய துணிகள் பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடினயாக தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
இதனால் ரயில் பெட்டி முழுவதும் எரியாமல் தப்பியது. பின்னர் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மற்றொரு பெட்டிக்கு மாற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து 30 நிமிடம் தாமதமாக 7.35 மணிக்கு ரயில் நெல்லை புறப்பட்டு சென்றது.