திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் வேகமாக குணமாகி வருகிறது என்றும், இன்னும் 10 நாட்களில் அவர் முழுமையாக குணமடைந்து கட்சி பணிக்கு திரும்புவார் என கனிமொழி தெரிவித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அவருக்கு அலர்ஜி காரணமாக உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் விசாரித்து வருகின்றனர். நேற்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கனிமொழியிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி கூறியதாவது,
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் வேகமாக குணமாகி வருகிறது என்றும், இன்னும் 10 நாட்களில் அவர் முழுமையாக குணமடைந்து கட்சி பணிக்கு திரும்புவார் என கனிமொழி தெரிவித்தார்.