மூத்த சிபிஎம் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு - நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின்.!

By Raghupati RFirst Published Oct 1, 2022, 11:46 PM IST
Highlights

மூத்த சிபிஎம் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட சிபிஎம் கட்சியின் மூத்த அரசியல்வாதியான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 68.  உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிய பாலகிருஷ்ணன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலமானார்.

இதையும் படிங்க..‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ

கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சி.பி.ஐ.எம் தலைமைக் குழு உறுப்பினரும், மூன்று முறை அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான திரு. கோடியேரி பாலகிருஷ்ணன்.

இதையும் படிங்க..இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த +1 வகுப்பு மாணவி - அதிர்ச்சி சம்பவம்

Paid my last respects to Polit Bureau Member and 3 time Kerala State Secy Thiru. Kodiyeri Balakrishnan.

Com. Kodiyeri was an unyielding personality and was even jailed under MISA during the Emergency in 1975.

My heartfelt condolences to his family & CPI(M) comrades. pic.twitter.com/zFn2ZJ6ulJ

— M.K.Stalin (@mkstalin)

அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். கொள்கை உறுதிமிக்க தலைவராக விளங்கிய தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் அவர்கள், 1975-ஆம் ஆண்டு நெருக்கடிநிலையின்போது மிசா சட்டத்தின்கீழ் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..கேரளா மூத்த சிபிஎம் தலைவர் மறைவு - யார் இந்த கொடியேரி பாலகிருஷ்ணன் ?

click me!