"இனி +1 ஃபெயில் ஆனாலும் +2 படிக்கலாம்" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

First Published Aug 13, 2017, 11:26 AM IST
Highlights
sengottayan says about HSC examination


எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி குறித்த மத்திய அரசின் கடிதம் ஏது இதுவரை வரவில்லை என்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 3 விதமான சீருடைகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கென 2 வகையான சீருடைகள் வழங்கப்படும் என்றார். 

மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனிச்சீருடை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். மேலும், பதினோராம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும், பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டே தோல்வியடைந்த பாடங்களை எழுதலாம் என்றார்.

ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி முறை மாற்றம் செய்வது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி முறை மாற்றம் செய்யப்படுவது குறித்து மத்திய அரசின் கடிதம் ஏதும் இதுவரை வரவில்லை என்று கூறியுள்ளார்.

click me!