"+2 தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் செல்போனுக்கே வந்துவிடும்" - செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

Asianet News Tamil  
Published : May 10, 2017, 04:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
"+2 தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் செல்போனுக்கே வந்துவிடும்" - செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

சுருக்கம்

sengottayan pressmeet about HSC results

2016-2017-க்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 2ல் தொடங்கி 31 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதன் தேர்வு முடிவுகள் வரும் 12 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 12 ஆம் தேதி வெளியிடப்படும்.மாணவர்களின் சான்றிதழ் ஆங்கிலம் மற்றும் தமிழில் வழங்கப்படும்.

மாணவர்களின் தேர்வு முடிவுகளை பெற்றோர்களின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.இட ஒதுக்கீடு செய்யாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கோடை விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய பாட திட்டங்கள் குறித்து நாளை ஆலோசனை செய்யப்பட இருக்கிறது. ஆலோசனை முடிந்தவுடன் தெரிவிக்கப்படும்.

தேர்வு முடிவு வெளியான 10 நிமிடங்களுக்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

Govt Loan Scheme:12th தகுதியே போதும்.! தொழில் தொடங்க அடமானம் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை கடன் கிடைக்கும்..! இளைஞர்களுக்கு செம வாய்ப்பு!
Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?