உயிர் நீத்த ராணுவ வீரருக்கு அஞ்சலி!! ரூ 50 ஆயிரம் நிதி கொடுத்த செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி!! கண்கலங்க வைத்த நெகிழ்ச்சியான தருணம்!!

By sathish kFirst Published Feb 25, 2019, 7:35 PM IST
Highlights

உயிர் நீத்த வீரனுக்கு வீரவணக்கம், 50000 நிதி கொடுத்த  செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி... கண்கலங்க வைத்த நெகிழ்ச்சியான தருணம்!!

புல்வாமாவில் நடந்த தாக்குதலில் உயிர் நீத்த அரியலூர் வீரர் சிவசந்திரனுக்கு வீரவணக்கம் மற்றும் ரூ 50000 நிதி கொடுத்த செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி, ஆறுதல் சொல்லி, வீர வணக்கம் என நெகிழவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் அவாந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 14-ம் தேதியன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இதுவரையிலும் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் என்பவரும் உயிரிழந்துள்ளனர். 

இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 

இந்த நிலையில் காஷ்மீரில் உயிர் நீத்த அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரன் குடும்பத்தினருக்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகுக்கு அறிமுகமான ஜோடி செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்பு அவரது சமாதிக்குச் சென்று மலர் தூவி கண்கலங்கி வீரவணக்கம் செலுத்தினார். மேலும்  உயிர் நீத்த ராணுவ வீரர் சிவசந்திரன் குடும்பத்திற்கு 50000 நிதி உதவி அளித்தனர்.

தொலைக்காட்சியிலும், கச்சேரி நடத்தி வரும் நாட்டுப்புறப் பாடகர்களான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடி ராணுவ வீரர்களுக்கு நிதியுதவி அளித்ததும், நேரில் சென்று கண்கலங்கி ஆறுதல் சொன்னதும் நெகிழ வைத்துள்ளது.

click me!