போலீஸின் பாதுகாப்பு வளையத்தில் சேலம் ஆட்சியர்; போர்க்கொடியை தூக்கிக் கொண்டு ஆட்சியரகம் பயணிக்கும் மாணவர்கள்...

 
Published : May 24, 2018, 08:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
போலீஸின் பாதுகாப்பு வளையத்தில் சேலம் ஆட்சியர்; போர்க்கொடியை தூக்கிக் கொண்டு ஆட்சியரகம் பயணிக்கும் மாணவர்கள்...

சுருக்கம்

selam collector in police security zone Students go to collector office to protest

சேலம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டைக் கண்டித்து கண்டித்து சேலம் ஆட்சியரை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். இதனால்,  ஆட்சியர் அலுவலகத்திற்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது காவலாளர்கள் தடியடி நடத்தியும், துப்பாக்கி சூடு நடத்தியும் 12 பேரை கொன்றனர். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். 

அரசின் இந்த கொடூர செயலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. 

அதன்படி, சேலத்திலும் போராட்டம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக சேலத்தில் போராட்டம் தொடர்ந்தது. சேலம் அரசு கல்லூரி மாணவர்கள் பலர் நேற்று கருப்பு சட்டை அணிந்து கொண்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் காவலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவர்களிடம், காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கூறினார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு துணை ஆணையர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

முதன்முறையாக வெளிப்படையாக பார்ப்பனர்களை தூக்கி பிடிக்கும் அரசியல் தலைவர்..! சீமானுக்கு விசுவாசமாக இருப்பார்களா பிராமணர்கள்?
காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?