விஜயலட்சுமி விவகாரத்தை சட்ட ரீதியாக வந்தால் சட்டரீதியாக சந்திப்பேன். அரசியல் ரீதியாக வந்தால் அரசியல் ரீதியாக சந்திப்பேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் மீது விஜயலட்சுமி புகார்
நடிகர் விஜய் நடித்த ப்ரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி, இவர் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் வாழ்த்துகள் என்ற படத்தில் நடித்தார். அப்போது சீமானுக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சீமான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
தொடர்ந்து வீடியோ மூலமாக சீமானை கடுமையாக விமர்சித்தார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது இந்த பிரச்சனை சூடு பிடித்துள்ளது. நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்த நிலையில் அடுத்த கட்டமாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.
சீமானுக்கு சம்மன் அளிக்க போலீஸ் திட்டம்
இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் கொடுக்க உதகை சென்றதாக தகவல் வெளியானது. மேலும் எந்த நேரத்திலும் சீமான் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டது. இந்தநிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், விசாரணைக்க ஆஜராகும் படி எனக்கு எந்த சம்மன் இதுவரை வரவில்லை. தன்னை கைது செய்யப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் வதந்தி என தெரிவித்தார். விஜயலட்சுமி விவகாரத்தை சட்ட ரீதியாக வந்தால் சட்டரீதியாக சந்திப்பேன். அரசியல் ரீதியாக வந்தால் அரசியல் ரீதியாக சந்திப்பேன். ஒரு மனிதனை 24 மணி நேரமும் பரபரப்பாக வைத்துள்ளீர்கள் என குறிப்பிட்டார்.
எப்படி வந்தாலும் எதிர்கொள்ள தயார்
2011 ல் புணையப்படட இவ்வழக்கில் என் மீது எந்த தவறும் செய்யவில்லை என அப்பெண்ணே எழுத்து பூர்வமாக கொடுத்துள்ளார், அதன் பிறகு பலமுறை நான் சிறைக்கு சென்றுள்ளேன். என்னை கைது செய்யப்பட வேண்டுமென்றால் அங்கு வைத்தே கைது செய்திருக்கலாம். ஆனால் இதுவரை அப்படி நடக்காத நிலையில் வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்பி வருவதாகவும் தெரிவித்தார். உதகையிலும் காவல்துறை இருந்தது. நாளை சென்னை சென்று விடுவேன். என்னை பார்த்தால் மிரட்டலுக்கு பயப்படுகிறவன் போல் தெரிகிறதா என சீமான் கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்
உடனே கிரிமினல் நடவடிக்கை எடுங்க! நடிகை விஜயலட்சுமி, வீரலெட்சுமி மீது நாம் தமிழர் கட்சி புகார்!