சைதை துரைசாமி மகனின் நிலை என்னவென்பது தெரியாத கொடுஞ்சூழல் மிகுந்த மனவலியை தருகிறது- சீமான்

Published : Feb 08, 2024, 01:17 PM IST
சைதை துரைசாமி மகனின் நிலை என்னவென்பது தெரியாத கொடுஞ்சூழல் மிகுந்த மனவலியை தருகிறது- சீமான்

சுருக்கம்

சைதை துரைசாமியின் மகன் வெற்றி இன்னமும் ஏதோ ஓர் இடத்தில் நலமோடு இருக்கிறார், விரைவில் திரும்பி வந்துவிடுவார் என்பதே என் விருப்பமாக இருக்கிறத என சீமான் தெரிவித்துள்ளார்.

சட்லெஜ் ஆற்றில் விபத்து- வெற்றி மாயம்

அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமியின் மகன் வெற்றி சட்லெஜ் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கியது தொடர்பாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைதை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சென்னை மாநகரத் தந்தையுமான எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா சைதை துரைசாமி அவர்களின் அன்புமகன் வெற்றி அவர்கள் இமாச்சல பிரதேசம் சட்லெஜ் ஆற்றில் மகிழுந்து கவிழ்ந்த விபத்தில் சிக்குண்ட செய்தியறிந்து, பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

மனவலியை தருகிறது

எல்லோரிடமும் அன்புடனும், மிகுந்த மரியாதையுடனும் பேசிப் பழகும் பெருங்குணமும், எளிமை பண்பும் ஒருங்கே கொண்ட தம்பி வெற்றியின் நிலை என்னவென்பது தெரியாத கொடுஞ்சூழல் மிகுந்த மனவலியை தருகிறது. மனிதநேய அறக்கட்டளை மூலம் இலவசப் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியளித்துப் பல்லாயிரக்கணக்கான ஏழை-எளிய வீட்டுப் பிள்ளைகள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருந்தகை ஐயா சைதை துரைசாமி அவர்கள். தமிழ்நாட்டிலிருந்து அதிகளவில் குடிமைப்பணி அதிகாரிகளை உருவாக்கி தந்த பெருமைக்குரியவர். ஐயா அவர்கள் மாநகரத் தந்தையாக இருந்தபோது சென்னையின் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிகோலியவர். 

விரைவில் திரும்பி வந்துவிடுவார்

அப்படிப்பட்ட மாமனிதருக்கு நிகழ்ந்துள்ள இத்துயரச்சூழல் மனதை மிகவும் கனக்கச்செய்கிறது. இதிலிருந்து ஐயா துரைசாமி அவர்களும், அவரது குடும்பத்தினரும் உறுதியான மனத்திடத்துடன் மீண்டுவர வேண்டும். தம்பி வெற்றி இன்னமும் ஏதோ ஓர் இடத்தில் நலமோடு இருக்கிறார், விரைவில் திரும்பி வந்துவிடுவார் என்பதே என் விருப்பமாக இருக்கிறது. மகன் நிலை அறியாது தவித்திருக்கும் ஐயா துரைசாமி அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கேற்று என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

நெருங்கும் தேர்தல்.... பாஜக அரசுக்கு எதிராக களம் இறங்கிய திமுக... BJPLootingOurTax என டிரெண்ட் செய்து அதிரடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி