தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் – ஆட்சியர் உத்தரவு…

 
Published : Jun 01, 2017, 08:51 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் – ஆட்சியர் உத்தரவு…

சுருக்கம்

Security measures should be taken before southwest monsoon

தருமபுரி

தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் தர்மபுரியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் விவேகானந்தன், அனைத்து துறை அலுவலர்களும் உத்தரவிட்டார்.

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது இந்தக் கூட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் விவேகானந்தன் பேசியது:

“தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைத் தொடங்குகிறது. இந்தப் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாக தர்மபுரி மாவட்டத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துத் துறை அதிகாரிகளும் தங்கள் துறைச் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் அதுதொடர்பாக உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் 8903891077 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் 24 மணி நேரமும் அலுவலர்கள் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.

இந்தத் எண்களை மக்கள் பயன்படுத்துவது தொடர்பாகவும் அந்தந்த துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று ஆட்சியர் விவேகானந்தன் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் பொன்னுராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்தானம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!