கோவையில் வெடி குண்டுகள் வெடிக்கும்... மிரட்டல் இ-மெயிலால் பதற்றம்- பாதுகாப்பு அதிகரிப்பா.? காவல்துறை விளக்கம்

By Ajmal Khan  |  First Published Nov 12, 2023, 8:59 AM IST

கோவையில் குண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டு காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்த இ மெயிலால் பதற்றம் போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.
 


கோவைக்கு வெடி குண்டு மிரட்டல்

கோவையில் கடந்த தீபாவளி பண்டிகை தினத்திற்கு முன்பாக உக்கடம் பகுதியில் கார் வெடிகுண்டானது வெடித்தது இதன் காரணமாக அந்தப் பகுதியே ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவியது.  இந்த கார் வெடிகுண்டு வழக்கில் தீவிரவாதி ஜமுசா மூபின் உயிரிழந்த நிலையில் மேலும் 14 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்த சூழ்நிலையில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் ஒன்று வந்துள்ளது.  அந்த மெயிலில் கோவையில் பல்வேறு இடங்களில் இன்று வெடிகுண்டுகள் வெடிக்கும் என்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த தகவல் வந்ததை அடுத்து கோவை காவல்துறை அலர்ட் செய்யப்பட்டதை எடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு

பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதனிடையே இமெயில் அனுப்பியவர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இ மெயில் முகவரியை சோதனை செய்த போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த  இசக்கி என தெரியவந்தது. இதனையடுத்து இசக்கியை பிடித்து விசரணையை நடத்த போலீசார் திட்டமிட்டு்ளனர்.  

இதனிடையே கோவையில் வெடிகுண்டு வெடிக்கும் என வந்த மின்னஞ்சர் வதந்தி என தெரிவித்துள்ள கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தனிப்பட்ட முறையில் காவல்துறை பாதுகாப்பு அதிகப்படுத்தவில்லை. தீபாவளிக்கு வழக்கமாக வழங்கக்கூடிய பாதுகாப்பை மட்டுமே அளித்துள்ளதாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாட்டம்.. பாட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகம்

click me!