
VIPs gather in Coimbatore : தமிழகத்தில் முக்கிய நகரமாக இருப்பது கோவை, இந்தியாவின் மான்செஸ்டர் என கோவையை கூறுவார்கள். கோவையை சுற்றி பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளது. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 25,26,27, ஆகிய தேதிகளில் முக்கிய விவிஐப்பிக்கள் வரவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26 தேதிகளில் உதகையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் துணை குடியரசு தலைவர், தமிழக ஆளுநர் மற்றும் துணை வேந்தர்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
விஜய் கலந்து கொள்ளும் அரசியல் நிகழ்வு
கோவையை அடுத்த குரும்ப்பாளையம் பகுதியில் உள்ள SNS தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் தவெக சார்பில் கருத்தரங்கம் வருகிற 26 மற்றும் 27 தேதி நடைபெறுகின்றது. இதில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கவுள்ளார். விஜய் முதல் முறையாக கோவையில் அரசியல் தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் கலந்தொ கொள்ள இருப்பதால் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் கோவையில் கூடவுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டி- உதயநிதி பங்கேற்பு
இதே போல கோவை செட்டிபாளையத்தில், தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து வரும் 27 ந்தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெறும் நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்தும் 800 க்கும் மேற்பட்ட காளைகள், அந்த காளைகளை அடக்க 500க்கும் மேற்பட்ட காளையர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கோவையை சுற்றி வளைக்கும் போலீசார்
எனவே கோவையில் அடுத்தடுத்து 3 நாட்களில் முக்கிய விவிஐபிக்கள் வரவுள்ளதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றப்படவுள்ளது. அதிலும் துணை குடியரசு தலைவர் சாலை மார்க்கமாக உதகைக்கு செல்லவுள்ளதால் வழி நெடுகிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.