''வடகிழக்கு பருவமழை அடுத்த வருஷம்தான் வரும்...!" – வானிலை ஆய்வு மையம்

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
''வடகிழக்கு பருவமழை அடுத்த வருஷம்தான் வரும்...!" – வானிலை ஆய்வு மையம்

சுருக்கம்

தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். தென்மேற்கு பருவமழை காலம் முடியும் நேரத்தில் நடா புயல் உருவானது. இதனால், தென்மேற்கு பருவமழை தாமதமாக முடிவடைந்தது.

இதைதொடர்ந்து, தமிழகத்துக்கு அதிக மழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை, காலம் கடந்து அக்டோபர் 30ம் தேதி தொடங்கியது. ஆனாலும் 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் அதிகம் வலுப்பெறாத காரணத்தால் குறைவாகவே மழை பெய்த்து. இதனால் 70 சதவீதம் மழை குறைந்தது.

இந்நிலையில், சென்னையில் வர்தா புயல் கரையை கடந்தபோது, தமிழக கடல் பகுதியிலுள்ள ஈரப்பதத்தையும், காற்றின் அழுத்தத்தையும் அடித்து சென்றது. இதனால் வர்தா புயலுக்கு பின், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகள் வலுப்பெறாமல் போய்விட்டன.

இதையொட்டி தமிழகத்துக்கு போதிய மழை இல்லாத நிலை உள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31ம் தேதி நிறைவடையும். ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக ஓரிரு வாரங்கள் நீடிக்க வாய்ப்புள்ளது. அதாவது வரும் ஜனவரி முதல் அல்லது 2வது வாரத்தில் மழை பெய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் கூறுவதை நாம் கண்க்கிட்டு பார்க்கும்போது, ஒரு வாரம் என்பது, நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்கிறது. எனவே, இந்தாண்டு மழை கிடையாது. அடுத்த ஆண்டுதான் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு பின், ஒரு வாரம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. பருவமழை நீடிக்கும் பட்சத்தில் மழைப்பொழிவுக்கு 50 சதவீத வாய்ப்பு உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், ஜனவரி மாதம் வங்கக்கடலில் புயல் உருவாகி அதிக மழை பெய்த்து. சில சமயங்களில் மழைப்பொழிவு இல்லாமல் வறட்சியுடன் நிறைவடையும். இதற்கு 50 சதவீத வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், வங்கக் கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலை, கடலின் அழுத்தம் ஆகியவற்றை கொண்டே இவற்றை துல்லியமாக கணிக்க முடியும் என்றனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
டெலிவரி ஊழியருக்கு சரமாரி வெட்டு.. சென்னையில் போதை கும்பல் வெறியாட்டம்.. ஷாக் வீடியோ!