அரசு பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் - பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

Asianet News Tamil  
Published : May 26, 2017, 01:50 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
அரசு பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் - பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

சுருக்கம்

schools reopen on june 7

கோடை விடுமுறைக்கு பின், திட்டமிட்டபடி ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடந்தன. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, 10ம் வகுப்பு மற்றும் கீழ்வகுப்புகளுக்கான அனைத்து பொதுத் தேர்வுகளும் ஏப்ரல் மாத இறுதியில் நடந்து முடிந்தது. 

பின்னர், மே 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை  அறிவிக்கப்பட்டு, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் கத்தரி வெயில் தாக்கத்தின் காரணமாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 110 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகளை ஜூன் 7  தேதி அனைத்து பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், திட்டமிட்டபடி ஜூன் 7ம் தேதி அரசு பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. 

ஆனால், சில தனியார் பள்ளிகள் மட்டும் தங்கள் வசதிக்கேற்ப சற்று தாமதமாக பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளனர். சில தனியார் பள்ளிகள் 3ம் தேதி திறக்கப்படும் என்று பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி வருகின்றன.

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!