கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு..! உற்சாகமாக பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள்

Published : Jun 12, 2023, 08:35 AM ISTUpdated : Jun 12, 2023, 08:37 AM IST
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு..! உற்சாகமாக பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள்

சுருக்கம்

கோடை விடுமுறை சுமார் 45 நாட்களுக்கு பிறகு 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகமாக சென்றனர். 

விடுமுறைக்கு பின பள்ளிகள் திறப்பு

பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்து கோடை விடுமுறையானது மே மாதம் முழுவதும் விடப்பட்டது. இதனையடுத்து வழக்கம் போல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஆனால்  எப்போதும் இல்லாத அளவில் வெயிலின் தாக்கமானது அதிகமாக காணப்பட்டது. இதனால்  பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7 ஆம் தேதியாக மாற்றப்படுவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இதனை தொடர்ந்தும் அனல் காற்று தொடர்ந்து வீசியதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் மாணவர்களின் நலனை கருதி மீண்டும் பள்ளி திறப்பு தள்ளிப்போடப்பட்டது.

உற்சாகமாக பள்ளிக்கு சென்ற மாணவர்கள்

அதன்படி, பள்ளிகள் திறக்கும் தேதியை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதியும் 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 12ஆம் தேதியும் திறக்கப்படும் என அறிவித்தது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் இன்று காலை திறக்கப்பட்டது. முன்னதாக பள்ளிகளை தூய்மை செய்யும் பணிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டிருந்தது.  சுமார் 45 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். தங்களது நண்பர்களை பார்க்கும் மகிழ்ச்சியல் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் காட்சிகளை பார்க்க முடிந்தது. ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்கப்பட்டனர். இந்த நிலையில்  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினமே பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகம் மற்றும் சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

சமையல் செய்தபோது விபத்துக்குள்ளான சிலிண்டர்; 5 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நெஞ்சை உருக்கும் சோகம்..! அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவன் பலி..!
செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு