#Breaking: Tamilnadu Rain : கனமழை எதிரொலி… 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

By Narendran SFirst Published Nov 26, 2021, 9:53 PM IST
Highlights

கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்றுமுன் தினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று எதிர்பார்த்த நிலையில், காற்று உந்துதல் காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவில்லை என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என்றும் அறிவித்தது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக நாகை, அரியலூர், நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றை தொடர்ந்து தற்போது கடலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களிலும் சாலைகளில் தண்ணீர் வெள்ளபோல சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், சென்னை வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.                  

click me!