அரிசி சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

Published : Jan 30, 2025, 01:37 PM ISTUpdated : Jan 30, 2025, 01:39 PM IST
அரிசி சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

சுருக்கம்

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவி அரிசி சாப்பிட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்துள்ள ஆதனூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் மாளவிகா (11). இவர் காட்டு நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். மாளவிகாவுக்கு வீட்டில் சமைக்க வைத்திருக்கும் அரிசியை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:  முருக பக்தர்களின் கோடிக்கணக்கான காணிக்கை வேணும்! ஆனால் அடிப்படை வசதியை செய்யமாட்டீங்க! சொல்வது யார் தெரியுமா?

கடந்த 27ம் தேதி வழக்கம் போல காலையில் பள்ளிக்கு செல்வதற்கு முன் அரிசியை சாப்பிட்டு விட்டு சென்றுள்ளார்.  பள்ளிக்கு சென்ற மாளவிகா சோர்வாகவே காணப்பட்டார். இதனை கண்ட ஆசிரியர் தண்ணீர் கொடுத்து அவரை ஓய்வெடுக்க வைத்துள்ளார். பின்னர் இதுகுறித்து அதே பள்ளியில் படிக்கும் அவளது அக்காளை அழைத்து விஷயத்தை தெரிவித்தனர். 

இதையும் படிங்க: நள்ளிரவில் அலறிய சென்னை! குத்துச் சண்டை வீரர் ஓட ஓட வெட்டி படுகொலை! பீதியில் பொதுமக்கள்!

இதனையடுத்து மாலையில் பள்ளி முடிந்து இருவரும் ஆட்டோவில் வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் மாளவிகா மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறி கூச்சலிட்ட படியே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிக் கொண்டு சென்றனர். அங்கு அவளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் குறித்த நேரத்தில் வர தாமதமானதால் ஆட்டோவில் மாளவிகாவை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: வந்த வேகத்திலேயே மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய நடிகை! கமல்ஹாசன் காரணமா?

அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர்கள் மாளவிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத பெற்றோர் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர். அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்டது செரிமானம் ஆகாததால் மாளவிகா உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!