
வேலூர் அருகே பள்ளி மாணவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சி தாயப்பர் தெருவை சேர்ந்தவர் சதீஷ். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்திகள் உள்ளனர்.
இதனிடையே சதீஷ் பணிபுரியும் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் அவரை அப்பள்ளியிலிருந்து டிசி வாங்கிக் கொண்டு சென்னையில் உள்ள வேறு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.
ஆனாலும் சதீசுக்கும் அந்த மாணவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு நீடித்தது. இந்நிலையில் நாட்றாம்பள்ளி ஏரிக்கோடியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை நண்பர்களோடு கண்டுகளித்துவிட்டு, இரவு 11 மணியளவில், ஏரிக்கரை சர்வீஸ் சாலையில் தனியாக வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்பு தங்களிடமிருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டின கொன்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றாம்பள்ளி காவல்துறையினர் உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் ,துறையினர் சதீஷை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.