பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் காசநோய் குறித்து விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்த ஆட்சியர் அறிவுரை...

 
Published : Apr 20, 2018, 07:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் காசநோய் குறித்து விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்த ஆட்சியர் அறிவுரை...

சுருக்கம்

School students consulted to conduct awareness campaigns on tuberculosis ...

கிருஷ்ணகிரி

காசநோய் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்வதோடு, பள்ளி மாணவ, மாணவிகள் மூலமாக ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்று கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவன் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், தனியார் ஆய்வகத்தினர், மருந்து விற்பனையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் கதிரவன் தலைமை தாங்கினார். 

இந்தக் கூட்டத்தில் ஆட்சியர், "மத்திய அரசு வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள காசநோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை பெறுவது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், காசநோய் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்வதோடு, பள்ளி மாணவ, மாணவிகள் மூலமாக ஊர்வலங்கள் நடத்த வேண்டும். 

அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காசுநோய் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பணியாற்றி வருகின்றன. இங்கு காச நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சார்ந்த தனியார் மருத்துவமனையினர், தனியார் மருத்துவர்கள், ஆய்வகத்தினர் தங்களிடம் காசநோய் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் காசநோய் கண்டறியப்பட்டவர்கள் விவரங்களை உடனுக்குடன் காசநோய் துணை இயக்குநருக்கு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தெரிவிக்க வேண்டும். 

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருந்து விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் காச நோய்க்கான மருந்துகள் வாங்குபவர்கள் குறித்த விவரங்களை காசநோய் துணை இயக்குனருக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் துணை இயக்குனர் (காசநோய்) மருத்துவர் கவிதா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷெரிப்தின், மேற்பார்வையாளர் சிலம்பரசன், மருந்து விற்பனை வணிகர்கள், தனியார் ஆய்வகத்தினர் மற்றும் பலர் பங்கேற்றனர்.  


 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!