திருநெல்வேலியில் பள்ளி மாணவர், மாணவிகளின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி…

Asianet News Tamil  
Published : Oct 19, 2017, 08:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
திருநெல்வேலியில் பள்ளி மாணவர், மாணவிகளின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி…

சுருக்கம்

School student in Tirunelveli students awareness cycle rally ...

திருநெல்வேலி

திருநெல்வேலியில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, கையெழுத்து இயக்கம் மற்றும் மீட்பு ஒத்திகை போன்றவை நடைப்பெற்றன.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி, கையெழுத்து இயக்கம், மீட்பு ஒத்திகை ஆகியவை நடைப்பெற்றன.

பாளையங்கோட்டை வ.உசி. மைதானத்திலிருந்து தொடங்கிய பள்ளி மாணவர், மாணவிகளின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

இந்தப் பேரணி லூர்துநாதன் சிலை வழியாக தெற்கு பஜார் குழந்தை யேசு மேல்நிலைப் பள்ளி வரை சென்று நிறைவுப் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நடைப்பெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், பேரிடர் காலங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகையும் நிகழ்த்தி காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் மைதிலி மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயபாண்டி, வட்டாட்சியர் தங்கராஜ், பேரிடர் பயிற்சியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!