
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மழை பொழிவைப் பொறுத்து பள்ளி நிர்வாகமே விடுமுறை விடுது குறித்து முடிவு செய்யலாம் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கி படிப்படியாக தீவிரம் அடைந்தது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. பருவமழை நாளுக்கு நாள் மழை வலுவடைந்து வந்ததால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டன.
கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே, பள்ளியில் இருந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். ஆனாலும், கனமழை தொடர்ந்து கொண்டே இருந்ததால், நவம்பர் 3 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் நேற்று திங்கட்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனாலும் காலை முதலே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, இன்று முதட்லட பள்ளிகளைத் திறக்க பள்ளி-கல்வித்துறை முடிவு செய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது., சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மழை பொழிவைப் பொறுத்தே வேளச்சேரி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளி நிர்வாகமே முடிவு செய்யலாம் என்றும் தேவைப்பட்டால் விடுமுறை விடலாம் என்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்துள்ளார்.