2ஜி வழக்கு தீர்ப்பு இன்னும் ரெடியாகவில்லையாம்... டிச.5 ஆம் தேதிக்கு தீர்ப்பு தேதியை ஒத்திவைத்தார் நீதிபதி

First Published Nov 7, 2017, 10:45 AM IST
Highlights
2 G Verdict Not Ready Says Judge Defers Hearing To December 5


நாடு முழுதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 2ஜி வழக்கில், தீர்ப்பு இன்னும் முழுதாக தயாராகவில்லையாம். இதனிடையே இன்று தீர்ப்பு குறித்த தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, 2ஜி வழக்கு தீர்ப்பு தேதியை  வரும் டிச.5ம் தேதி ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். 

கடந்த 2007-2008ஆம் ஆண்டில் துவங்கிய சர்ச்சை, தொடர்ந்து பதியப் பட்ட ஊழல் வழக்கு, பத்து ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் இழுத்துக் கொண்டுதான் உள்ளது. 

முந்தைய மன்மோகன் சிங் அமைச்சரவையில் இருந்த திமுக.,வைச் சார்ந்த ஆ.ராசா,  இந்தச் சர்ச்சையில் சிக்கினார். 

முன்னதாக, இந்தத் தீர்ப்பு குறித்த தேதி வெளியிடும் முன்னர் நேற்று பிரதமர் மோடி சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, அவர் மு.கருணாநிதி இல்லத்துக்குச் சென்று, அவர் உடல் நலம் குறித்து விசாரித்தார். 2ஜி வழக்கில் சிக்கியுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழி, மற்றும் அவரது மகன் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரும் மோடி பேசிக் கொண்டிருந்தார். இது பல்வேறு யூகங்களை அரசியல் தளத்தில் கிளப்பிவிட்டுள்ளது. 2ஜி வழக்கு தீர்ப்பு தேதிக்கும், இந்த சந்திப்புக்கும் என்ன தொடர்பு இருக்கும் என்று ஊடகங்களில் விவாதங்களும் களை கட்டிவிட்டன. 

click me!