
விபத்துக்கள் நடப்பது எதிர்பாராத ஒன்று தான். அதுவும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன
காரணம் சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருப்பது
ஹெல்மெட் அணிவது கிடையாது
முறையாக பயிற்சி பெற்று வாகனத்தை ஒட்டமால் தடுமாறி யார் மீதாவது ஏற்றி விபத்து ஏற்படுத்துவது
சில சமயத்தில் கட்டுபாட்டை இழந்த வாகனம் தடுமாறி கவிழ்வது..
இது போன்ற பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம் ...
அந்த வரிசையில் இன்று..தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு தடுப்பு சுவரில் ஹைவே பேட்ரோல் வாகனம் மோதியதில் காவலரும், ஓட்டுனருமான ராமகிருஷ்ணன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடனிருந்த எஸ்.ஐ..ரவிச்சந்திரன் பலத்த காயம் அடைந்துள்ளார். காயமடைந்த எஸ்.ஐ தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நடந்ததை அடுத்து தற்போது மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன.போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஹைவே பேட்ரோல் வாகனம் விபத்துக்குள்ளானதால் பெரும் பதற்றம் நிலவுகிறது