கலை நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்புகள் வழங்கும் திட்டம்... தெரிவு செய்யப்பட்ட இளம் கலைஞர்கள் விவரம் இதோ!!

By Narendran SFirst Published Jan 2, 2023, 6:56 PM IST
Highlights

2020-2021 ஆம் ஆண்டுக்கான இளம் கலைஞர்களை கலை நிகழ்ச்சிகள் நடத்திட தெரிவு செய்யப்பட்டது.

2020-2021 ஆம் ஆண்டுக்கான இளம் கலைஞர்களை கலை நிகழ்ச்சிகள் நடத்திட தெரிவு செய்யப்பட்டது. இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தகுதிவாய்ந்த இளம் கலைஞர்களுக்குக் கலை நிறுவனங்களின் வாயிலாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்புகள் வழங்கும் திட்டத்தின்கீழ், 2020-2021 ஆம் ஆண்டுக்கான இளம் கலைஞர்கள் இளம் கலைஞர்களை கலை நிகழ்ச்சிகள் நடத்திட தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

இசைத் துறை

குரலிசை:

  • செல்வி ப. அக்ஷயா, சென்னை
  • செல்வி சு. கீர்த்தனா, சென்னை
  • செல்வி ஜி. அபர்ணா, கோவை
  • செல்வன் என். ரித்கேஷ்வர், சென்னை

 தனிவயலின்:

  • செல்வன் எஸ். சிவராம், சென்னை

வயலின்:

  • செல்வன் வி. பார்கவ விக்னேஷ், சென்னை

மிருதங்கம்:

  • செல்வன் மு. ஜெயந்திரகுமார், சென்னை
  • செல்வன் அ. ரோஹித், சென்னை
  • செல்வன் எல். வினோத், இராணிப்பேட்டை
  • செல்வன் டி. ஆர். சூரஜ், சென்னை
  • செல்வன் யஷ்வந்த் ரவி, சென்னை

கஞ்சிரா

  • செல்வி டி. பூஜா, சென்னை
  • செல்வன் பெ. ஆகாஷ்குமார், சென்னை

இதையும் படிங்க: ரூ.1000 கோடியில் பசுமை காலநிலை மாற்ற நிதி அமைத்து அரசாணை வெளியீடு

முகர்சிங்

  • செல்வி ர. கீர்த்தனா, தஞ்சாவூர்
  • செல்வன் ர. ஹரிகிருஷ்ணன், தஞ்சாவூர்

நாதஸ்வரம்

  • செல்வன் வெ. சீனிவாசன், சென்னை
  • செல்வன் டி. குகன், சென்னை

பரதநாட்டியத் துறை

  • செல்வி மிருதுளா சிவகுமார், சென்னை
  • செல்வி எல். ஸ்வேதா, சென்னை
  • செல்வி எல். புவனேஸ்வரி, சென்னை
  • செல்வி பி. வித்யா, கேரளா
  • செல்வி ரா. அபராஜிதா, சென்னை
  • செல்வி சாத்விகா அரவிந்தன், சென்னை
  • செல்வி ரா. லஷ்மி பிரியா, சென்னை
  • செல்வி ஆனாஹிதா சாலிஹா, சென்னை
  • செல்வி க. காவ்யா, சென்னை
  • செல்வி. ரா. ஹரிணி, சென்னை

கிராமியத் துறை

  • செல்வன் எம்.கார்த்திகேயன், கும்பகோணம் - பொம்மலாட்டம்
  • செல்வன் ப. மாரியப்பன், திருநெல்வேலி - வில்லுப்பாட்டு
  • செல்வி க. தேவி, ஈரோடு - கரகாட்டம்
  • செல்வன் மா. பத்மநாபன், கடலூர் - கரகாட்டம்
  • செல்வன் ச. முகமது ஹக்கீம், சேலம் - கரகாட்டம்
  • செல்வன் அ. ஜோதி பாஸ், திருப்பத்தூர் - மரக்கால் ஆட்டம்
  • செல்வன் இ. தீபன் ராஜ், மதுரை - ஒயிலாட்டம்
  • செல்வன் கி. மோகன் பிரகாஷ், மதுரை  - ஒயிலாட்டம்
  • செல்வன் எஸ். சக்திவேல், திருப்பத்தூர்  - பம்பை          

மேற்கண்டுள்ள தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கலைஞர்களுக்கும் தலா நான்கு நிகழ்ச்சிகள் தமிழகத்திலுள்ள கலை நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படும். இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.20.00 இலட்சம் நிகழ்ச்சிக்காக வழங்கப்படும். 
தமிழக பாரம்பரிய பண்பாட்டுக் கலைகளை புத்துயிர் ஊட்டி பேணி பாதுகாத்து வளர்த்திட தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் பல்வேறு கலைத்திட்டப் பணிகளை நிறைவேற்றி வருகிறது. அவற்றுள் முக்கியமானது இளங்கலைஞர்கள் ஊக்குவிப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின் வாயிலாக 16 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட திறமையுள்ள இளங்கலைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கம் வழங்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர்களுக்கு வாய்ப்பை அமைத்து கொடுத்து அவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியினை மன்றம் ஆரம்பித்த காலம் முதல் செய்துவருகிறது.

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைகிறேனா..? வானதி சீனிவாசன் வெளியிட்ட பரபரப்பு தகவல்

இத்திட்டத்தின் வாயிலாக திறமையுள்ள இளங்கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிக்காட்டுவதால், அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இத்திட்டம் அமைகிறது. இத்திட்டத்தால் பயன்பெற்று பின்னாளில் தலை சிறந்த கலைஞர்களாக விளங்கியவர்களில் சீர்காழி எஸ். கோவிந்தராஜன், நெய்வேலி சந்தான கோபாலன், டி.எம். கிருஷ்ணா, திரு. உன்னி கிருஷ்ணன், திரைப்பட நடிகைகள் ஹேமாமாலினி, ஸ்ரீபிரியா, ரேவதி, நாதஸ்வரக் கலைஞர் சேஷம்பட்டி சிவலிங்கம், வயலின் கைலாஷம், மிருதங்கம் தஞ்சாவூர் சுப்பிரமணியம், பரதநாட்டியம் பீனேஷ் மகாதேவன், கலாசேத்ரா சூர்ய நாராயணன், குரலிசை வசுதா ரமேஷ், குன்னக்குடி பாலமுரளி மற்றும் பலர். இது போன்ற புகழ்மிக்க கலைஞர்களை உருவாக்க, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இளம் வயதிலேயே அவர்களுக்குள் ஊற்றெடுக்கும் திறனை அறிந்து அறிமுகப்படுத்துகிறது. எப்படி ஒரு இளங்கன்றுக்கு நீருற்றி உரமிட்டு தழைத்தோங்கி வளரச் செய்வது போல் கிராமிய வாழ்வியல் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் அத்துனை நிகழ்விலும், உணர்விலும் ஆடல், பாடல், இசை என வாழ்ந்து வருபவர்கள் கிராம மக்கள் அவர்களின் கிராமியக் கலைகளை போற்றி பாதுகாக்க மன்றம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இப்பணிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைகளான கரகம், காவடி, நையாண்டி மேளம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, தப்பாட்டம் இன்னும் பல்வேறு கலைகளில் திறமைமிக்க இளங்கலைஞர்களையும் கண்டறிந்து அவர்களுக்கும் இத்திட்டம் நல்ல எதிர்காலத்தை அமைத்துத்தர இருக்கிறது. கல்வி மற்றும் கலை நிறுவனங்களில் பயின்று வரும் திறன்மிக்க இளங்கலைஞர்களும் இத்திட்டத்தின் வாயிலாக பங்குபெறலாம். இத்திட்டத்தின்கீழ், தேர்தெடுக்கப்படும் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை நடத்த விரும்பும் கலை நிறுவனங்கள் மற்றும் கலைச் சங்கங்கள் விண்ணப்பம் செய்து பதிவு செய்து கொள்ளலாம். 

தனிநபர் கலைஞர்கள் மற்றும் கலைக்குமுக்கள் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் விவரம்

  • 01.01.2023 தேதியில் கர்நாடக இசையில் குரலிசை, கருவியிசை மற்றும் பரதநாட்டிய கலைஞர்களுக்கு 16 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
  • 01.01.2023 தேதியில் கிராமியக்  கலைஞர்களுக்கு 16 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
  • மேடையில் தனித்து நிகழ்ச்சி நடத்தும் அனுபவம் மிக்கவராக இருத்தல் வேண்டும்.
  • நேர்முகத் தேர்விற்கு வருவதற்கான பயணப்படி, ஏதும் வழங்கப்பட மாட்டாது.
  • ஏற்கனவே, இத்திட்டத்தின்கீழ், பயன்பெற்றவர்களுக்கு மீண்டும் அதே பிரிவின்கீழ், நிகழ்ச்சி நடத்திட வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது.

கலை நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் விவரம்

  • விண்ணப்பிக்கும் கலை நிறுவனங்கள் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவையாக இருத்தல் வேண்டும்.
  • பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவம் மன்றத்தில் இலவசமாக நேரிலோ அல்லது தபாலிலோ சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10/-க்கான தபால் ஒட்டி மன்றத்திற்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் பெறவும் மற்றும் நிபந்தனைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்: 

முகவரி:

உறுப்பினர்-செயலாளர்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,
31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை,
சென்னை – 600 028, 
தொலைபேசி 044 – 2493 7471

2022-2023 ஆம் நிதியாண்டிற்கான இளம்கலைஞர்கள் ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் மன்றத்தில் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.01.2023 தேதிக்குள் மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!