குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் அவர் மீது கஞ்சா வழக்கு, இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் விளைவாக சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குண்டது தடுப்பு சட்ட நடவடிக்கைக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். முன்னதாக இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், “சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா? பொது அமைதிக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்துகிறார்? உள்ளிட்ட கேள்விகளை அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் எழுப்பியது.
நீட் மறு தேர்வுக்கு உத்தரவிட முடியாது; உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
இந்நிலையில், இந்த வழக்கின் மீது இன்று மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பல்வேறு முறைகேடான தகவல்களை பதிவிட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குண்டர் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
3வதும் பெண் குழந்தையா? பச்சிளம் குழந்தைக்கு தந்தையே எமனாக மாறிய சோகம்
அரசு தரப்பு வாதத்தை மறுத்த சவுக்கு சங்கர் தரப்பு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய அதே நீதிபதி, குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று தீர்ப்பு வழங்கி உள்ளார் என குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிவிட்டதால் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என வலியுறுத்துவதுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.