Savukku: கோவை சிறையில் கொல்லப்படுவேன்... என் கையை உடைத்தது இவர் தான்- நீதிமன்ற வளாகத்தில் கதறிய சவுக்கு சங்கர்

By Ajmal Khan  |  First Published May 13, 2024, 12:00 PM IST

பெண் காவலர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர்,  தன்னை கோவை சிறையில் கொலை செய்து விடுவார்கள் என அச்சம் தெரிவித்துள்ளார்.


குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது

அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் தொடர்பாக தொடர்ந்து யூடியூப் மூலம் விமர்சித்து வந்தவர் சவுக்கு சங்கர், இவர் பெண் காவலர்களை தொடர்பாக அவதூறு கருத்து கூறியதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். மேலும் சவுக்கு சங்கர் பயன்படுத்திய காரில் இருந்து போலீசார் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tap to resize

Latest Videos

இதனையடுத்து பல வழக்குகளும் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக கோவை சிறையில் அடைக்கப்பட்ட போது சவுக்கு சங்கரின் கைகளை போலீசார் சுற்றி நின்று தாக்கியதாகவும், இதில் அவரது கை உடைக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

சிறையில் கொல்லப்படுவேன்- சவுக்கு சங்கர்

இதனையடுத்து மதுரை நீதிமன்றத்தில் வலது கையில் கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த உத்தரவிட்டிருந்தனர். இந்தநிலையில் சவுக்கு சங்கரை போலீஸ் விசாரணைக்கு அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனு மீதான விசாரணையின் போது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். முன்னதாக மருத்துவமனையில் சவுக்கு சங்கர் உடல் நலம் தொடர்பாக ஆய்வுக்காக அழைத்து சென்றனர்.

அப்போது வீடியோ கேமராவை பார்த்த சவுக்கு சங்கர் எனது கையை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் என கூறியவர், கோவை சிறையில் தான் சமாதி என மிரட்டுவதாகவும், என்னை கொலை செய்துவிடுவார்கள் என புகார் தெரிவித்தார். 

Savukku : கோவை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கர்.!காரணம் என்ன.?

click me!