மகிழ்ச்சி செய்தி.. அனைத்து சனிக்கிழமைகளும் இனி விடுமுறை.. அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை..

By Thanalakshmi VFirst Published May 25, 2022, 2:15 PM IST
Highlights

தமிழகத்தில் 2022- 23 ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு தேதிகள் குறித்தான அறிவிப்பை இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன் படி, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கும் உத்தரவில், தமிழகத்தில் வரும் 2022 - 23 ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் அறிவிப்பு.. முழு விபரம்..

தமிழகத்தில் 1 - 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கபடும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் 12 ம் வகுப்புக்கு ஜூன் 20 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் வரும் கல்வியாண்டியில் கொரோனா கால அட்டவணை போல் அல்லாமல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும். தமிழகத்தில் வரும் கல்வியாண்டில், மாநில் பாடத்திட்டத்தின் படி செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை வெளியிட்டார். 

அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறும். அதே போல், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2023 ஆண்டில் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கப்படும். 12 ஆம் வகுப்பிற்கு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அடுத்த ஆண்டிற்கான 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..

click me!