இரண்டு நாட்களுக்கு கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை..? வானிலை அப்டேட்

Published : May 25, 2022, 01:49 PM IST
இரண்டு நாட்களுக்கு கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை..? வானிலை அப்டேட்

சுருக்கம்

தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுகள், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌
வெப்பச்சலனம்‌ காரணமாக,

25.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருச்சி, திண்டுக்கல்‌, நாமக்கல்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய
வாய்ப்புள்ளது.

26.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம்‌, நீலகிரி, கோவை, திருப்பூர்‌
மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

27.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

28.05.2022. 29.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்தகுற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌ என்று  கூறப்பட்டுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உதறல்நிதி.. ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் கதறல்! விடாமல் இறங்கி அடிக்கும் தவெக!
Magalir Urimai Thogai Scheme: குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை.! என்ன செய்யனும் ?