சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டம்

By Velmurugan sFirst Published Jun 10, 2023, 12:48 PM IST
Highlights

கோடை வெயிலின் தகாக்கத்தால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படும் நிலையில், இதனை ஈடு செய்யும் விதமாக வரும் கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் முழு ஆண்டு தேர்வுகள் நிறைவு பெற்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பள்ளிகள் திறப்பு தொடர்ந்து 2 முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இறுதியாக வருகின்ற 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியார்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில், “சிலம்பம் என்பது நமது கலாசாரம், பண்பாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தொடர்ந்து இதுபோன்ற கலைகள் அழிந்துவிடாமல் இருக்க பள்ளிகளில் இது தொடர்பான போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

திருவாரூரில் ஓர் உலக அதிசயம்; தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய அன்பு மகன்

மேலும், கோடை வெப்பத்தை காரணம் காட்டி பள்ளிகளை தாமதமாக திறப்பதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகரிக்காத வகையிலும், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் பாதிக்காத வகையிலும் வரும் கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

கொலை குற்றவாளியை சயின்டிஸ்டாக மாற்றிய கோவை மத்திய சிறை; சிறையில் உருவான இ சைக்கிள்

click me!