சதுரகிரி போறீங்களா…? அப்போ இதை நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கணும்….

By manimegalai aFirst Published Oct 5, 2021, 8:32 AM IST
Highlights

சதுரகிரி மலைக்கோயிலில் பக்தர்கள் வருகைக்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சதுரகிரி மலைக்கோயிலில் பக்தர்கள் வருகைக்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சாப்டூர் அருகே உள்ளது சுந்தரமகாலிங்ம் மலைக்கோயில். பக்தர்களிடையே புகழ்பெற்ற இந்த கோயிலில் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் பக்தர்கள் வருகை அதிகம் காணப்படும். அந்த நாட்களிலும், பிரதோஷ தினத்திலும் என மாதம் 8 நாட்கள் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி உண்டு.

இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வர ஆரம்பித்து உள்ளனர். வரும் 6ம் தேதி புரட்டாசி அமாவாசை வருகிறது. ஆனால் கொரோனா பரவல் என்பதால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு தலங்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்து உள்ளது.

இந் நிலையில் அக்டோபர் 7ம் தேதி வரை பக்தர்கள் யாரும் சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 7ம் தேதி வரை பக்தர்கள் இன்றி கோயிலில் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் புரட்டாசி அமாவாசைக்காக பூஜை ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.

click me!