பசு நம்முடைய தாயிற்கு இணையானவள் ..!பொங்கல் வாழ்த்தில் முக்கிய தகவல் சொன்ன சத்குரு

By Thanalakshmi VFirst Published Jan 15, 2022, 7:03 PM IST
Highlights

“ஈன்றெடுத்த தாயிற்கு பிறகு நாம் பசுவின் பால் குடித்து வளர்வதால் பசு நம்முடைய தாயிற்கு இணையானவள்” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
 

மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
“ஈன்றெடுத்த தாயிற்கு பிறகு நாம் பசுவின் பால் குடித்து வளர்வதால் பசு நம்முடைய தாயிற்கு இணையானவள்” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.

நம்மை சுற்றி பல ஜீவன்கள் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. அதிலும் குறிப்பாக, நாம் விவசாய கலாச்சாரமாக வளர்ந்து வந்ததால் மாட்டிற்கும் நமக்கும் ஒரு ஆழமான தொடர்பு உள்ளது.வயலில் மாடு நம்முடன் இணைந்து வேலை செய்கிறது. நாம் குடிக்கும் பாலும் அதனிடம் இருந்து தான் வருகிறது. பசு நம் தாயிற்கு பிறகு ஒரு முக்கிய உயிராக இருக்கிறாள். பசு நம் தாயிற்கு இணையானவள். அதனால் தான் மாட்டு பொங்கலை நாம் பெரிய விழாவாக கொண்டாடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகை என்பது நாம் உருவாகக் காரணமான மண், விலங்குகள், காற்று, நீர், மக்கள் என அனைத்தையும் கொண்டாடுவதற்கான ஒரு விழா என்று தெரிவித்துள்ள அவர், பொங்கலை கொண்டாடிக் களித்திடுங்கள்
என்று கூறியுள்ளார்.
 

click me!