சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்பட்ட பதாகைகள் சேதம்; அதிமுகவின் மறியல் போராட்டம்…

 
Published : Dec 19, 2016, 11:41 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்பட்ட பதாகைகள் சேதம்; அதிமுகவின் மறியல் போராட்டம்…

சுருக்கம்

வடகாடு,

வடகாடு பகுதியில் சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகளை சேதப்படுத்தியதால் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகாடு அருகே உள்ளது கீழாத்தூர். அங்குள்ள கடைவீதியில் அ.தி.மு.க.வினர் விளம்பர பதாகையை வைத்திருந்தனர்.

இந்த பதாகையை மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் பதாகையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கீழாத்தூர் கடைவீதியில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த வடகாடு காவலாளர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்தனர்.

இதேபோல அ.தி.மு.க.வினர் பொன்னமராவதியில் விளம்பர பதாகை ஒன்றை வைத்துள்ளனர். அந்த பதாகையையும் நேற்று மர்மநபர்கள் யாரோ சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இதையடுத்து அந்த பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு விளாம்பர பதாகைகளும் சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி