
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணையா?…உள்துறை அமைச்சகம் உத்தரவு…
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீரிழப்பு நோய் காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்,
ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த போது அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை,தமிழக ஆளுநர்,ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள் என ஏராளமானோர் ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்று ரிசப்சனுடன் திரும்பினர்.
ஜெயலலிதா நன்கு குணமடைந்து வருகிறார் என அப்பலோ மருத்துவமனை மற்றும் அதிமுக சார்பில் அறிக்கைகள் விடப்பட்டன. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் ஜெயலலிதா திடீரென மரணமடைந்தது அதிமுக தொண்டர்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் மனு அளித்தார்.
இதனிடையே ராஜ்நாத் சிங்கிடம் அளித்த மனு தொடர்பாக சிபிஐ யின் தனிப்பட்ட மற்றும் பயிற்சி துறை நடவடிக்கை எடுத்து சசிகலா புஷ்பாவுக்கு தெரிவிக்க உள்துறை அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளது