
இந்தியாவிலேயே மிக வித்தியாசமான கட்சி என்றால் அது அதிமுகதான். அதுவும் எம்ஜிஆர் இருந்தபோது அல்ல. ஜெயலலிதா கையில் எடுத்த பின்னர்தான், மிக வித்தியாசமான புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டன.
குறிப்பாக, அவரை கேட்காமல் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் எந்த விஷயமும் செயல்பாடுகளும் கட்சியில் நடைபெற கூடாது. சாதாரண தொண்டனின் இரங்கல் அறிக்கை என்றாலும், கட்சியின் உச்சபட்ச நடவடிக்கை என்றாலும் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் நடக்காது என்பது அதிமுகவில் எழுதப்படாத சட்டம்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அவருடைய பெயர் தாங்காமல் எந்த ஒரு அறிக்கையும் வெளிவாராது. நேற்று முன்தினம் அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு முடிந்தவுடன், பொது செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, தனது கட்சி வேலைகளை தொடங்கிவிட்டார்.
அதன் ஒரு கட்டமாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் ஜெயலலிதா செயலிலேயே சின்னம்மா ஒப்புதலோடு குறிப்பிட்டு அறிக்கை வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையில் பொது செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜெயலலிதா சமாதியில் தான் அஞ்சலி செலுத்தியதையும், உடன் வந்தவர்கள் யார், யார் என்ற விவரங்கள் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதான் சசிகலாவின் பெயர் தாங்கி வெளிவரும் அதிகாரப்பூர்வமான முதல் அறிக்கையாகும்.
எல்லாவற்றிலும ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் சசிகலா, அறிக்கை வெளியிடுவதிலும் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.