சசிகலாவுக்கு பதில் சசிகலாபுஷ்பாவின் போட்டோ…! – வங்க தேச பத்திரிகையில் வெளியானதால் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 11:44 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
சசிகலாவுக்கு பதில் சசிகலாபுஷ்பாவின் போட்டோ…! – வங்க தேச பத்திரிகையில் வெளியானதால் பரபரப்பு

சுருக்கம்

அதிமுகவில் தற்போதைய பொது செயலாளர் சின்னம்மா எனும் வி.கே.சசிகலாதான், இந்தியாவின் தற்போதைய ‘ஹாட் ஆப் தி டாக்’காக உள்ளார். இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாள், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளிலும் சசிகலா தொடர்பான செய்திகள் நாளடுகளில் வெளியாகிறது.

இப்படி ஓவர் நைட்டில் சசிகலா புகழடைய காரணம் ஜெயலலிதாவும், அவர் கட்டிக்காத்த அதிமுகவும் தான். மிகப்பெரும் ஆளுமையான ஜெயலலிதா எனும் பெண் தலைவி, தனது அதிரடி திட்டங்களால், உலகம் முழுவதும் புகழ் பெற்றிருந்தார்.

ஜெயலலிதா கட்டிக்காத்த அந்த கட்சியின் புதிய தலைமை பொறுப்பை சசிகலா ஏற்றிருப்பதால், அவருக்கு முக்கியத்துவம் அளித்து வெளிநாடுகளில் செய்திகள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தான், வங்காளதேசத்தின் ஒரு கூத்து நடைபெற்றிருக்கிறது.

சின்னம்மா எனப்படும் வி.கே.சசிகலாவுக்கு பதிலாக, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை எம்பியான சசிகலா புஷ்பாவின் படத்தை தனது முதல் பக்கத்தில் தலைப்பு செய்திக்கு மேலே போட்டு, பரபரப்பை கிளப்பியிருக்கிறது, அந்த நாட்டின் பிரபல நாளேடான ‘தி டெய்லி அப்சர்வர்’ பத்திரிகை.

அதிமுக பொது செயலாளராக சசிகலா பதவியேற்றுள்ளார் எனற செய்திக்கு தலைப்பு போட்டு, அருகில் சகிசலாபுஷ்பாவின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.

ஏற்கனவே வடமாநிலம் மற்றும் அண்டை மாநிலமான பெரும்பாலானோருக்கு சசிகலாபுஷ்பாவுக்கும், சசிகலா நடராஜனுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் இன்று வரை குழம்பியுள்ளனர். இந்நிலையில், வங்க தேச பத்திரிகை, புகைப்படத்தை மாற்றி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஸ்வெட்டர் ரெடியா மக்களே.. நடுங்க வைக்கப்போகும் பனி.. எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!
டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!