கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - சரோஜினி தாமோதரன் நிறுவனம் அறிவிப்பு...

First Published Aug 2, 2017, 6:26 PM IST
Highlights
Sarojini Damodaran welcomes helpless applications for the passes of Class XII


நடப்பு ஆண்டில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கான உதவிப்பண விண்ணப்பங்களை சரோஜினி தாமோதரன் நிறுவனம் வரவேற்கிறது,

சரோஜினி தாமோதரன் நிறுவனம் S.D.ஷிபுளால் மற்றும் குமாரி ஷிபுளால் கட்டமைப்பு பெற்று வித்யதன் உதவிப்பணம் இரண்டு இலட்சத்திற்குக் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவிப்பணம் பெறும் திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்குக் கீழ் பெறும்குடும்பங்களின்  மாணவர்கள்பயன் பெறுவார்கள். 

பத்தாம் வகுப்பு 2017 பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கும் மேல் மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தகுதியுள்ள மாணவர்கள் www.viyadhan.org என்னும் இணையத்தள முகவரியில் ஆகஸ்ட் 20 க்குள் விண்ணபிக்கலாம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பட்டம் பயில்வோர் உதவிப்பணம்பெறும் திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்குக் கீழ் பெறும் குடும்பங்களின்  மாணவர்கள் பயன் பெறுவார்கள். 

பனிரெண்டாம்  வகுப்பு 2017 பொதுத்தேர்வில் 85 சதவீதத்திற்கும் மேல் மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். 

தகுதியுள்ள மாணவர்கள் www.viyadhan.org எனும் இணையத்தள முகவரியில் ஆகஸ்ட் 20 க்குள் விண்ணபிக்கலாம். உதவிப்பணம் ரூபாய் 10 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை மாணவர்களின் படிப்பினை பொறுத்து வேறுபடும்.

விவரங்களுக்கு எனும் முகவரி அல்லது 7339659929, 08042995209 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொள்ளுங்கள்.

இதுகுறித்து சரோஜினி தாமோதரன் நிறுவனத்தின் காப்பாளர் குமாரி ஷிபுளால் கூறுகையில், கல்வி என்பது வாழ்வின் கடவுச்சீட்டு என நம்புவதாகவும் ஒவ்வொரு மாணவர்களையும் விண்ணப்பிக்க ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.

சரோஜினி தாமோதரன் நிறுவனம் ஆயிரத்து 500 மாணவர்களுக்கு உதவி செய்து 6 ஆயிரத்து 800 ரூபாய் உதவிப்பணம் வழங்கி இருப்பதாகவும், 81 மருத்துவர்கள், 223 பொறியாளர்கள், 48 செவிலியர்களை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டம் கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் செயல்பட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தெரிவித்தார்.  

click me!