”ஒரு ரூபாய்க்கு ஒரு புடவை”.. ஜவுளிக்கடையில் அலைமோதிய பெண்கள் கூட்டம்.. எங்கு தெரியுமா..?

By Thanalakshmi VFirst Published Sep 10, 2022, 1:21 PM IST
Highlights

கிருஷ்ணகிரியில் தனியார் ஜவுளிக் கடை ஒன்றில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் , காலை முதலே பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.
 

கிருஷ்ணகிரியில் தனியார் ஜவுளிக் கடை ஒன்றில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் , காலை முதலே பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.கிருஷ்ணகிரியில்  கே தியேட்டர் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக் கடை. இந்த கடை திறந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதனால் இன்று முதலாம் ஆண்டை முன்னிட்டு, பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க:போலீஸ் பேரு கெட்டுப் போச்சு.. பொதுமக்களிடம் ஓவர் சீன் வேண்டாம்... லெப்ட் ரைட் வாக்கிய டிஜிபி சைலேந்திரபாபு.

அதன்படி  ஜவுளிக் கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளருக்கு ஒரு ரூபாய்க்கு புடவை, ஆட்டோர் ஓட்டுநன்ருக்கு இலவ்ச பேண்ட், ஹர்ட் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை வழங்கப்படுகிறது. இதனால் இன்று அதிகாலை முதல் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடையின் முன் குவிந்தனர். 

மேலும் படிக்க: ஷாக்கிங் நியூஸ்.. தனியாளாக தாயின் இறந்த உடலை சக்கர நாற்காலியில் எடுத்து சென்ற மகன்.. ஏன் தெரியுமா?

முதல் 500 பேருக்கு ஒரு ரூபாய்க்கு புடவை என்பதால் கடை திறந்தவுடன் அலைமோதிய கூட்டம் புடவைகளை வாங்க கடைக்குள் புகுந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து ஜவுளிக்கடை நிறுவனம் சார்பில் 500 மேற்பட்ட பணியாளர்கள் கூட்டத்தை கட்டுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.  

click me!