முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை

Published : Dec 08, 2025, 09:32 AM IST
Mukhtar

சுருக்கம்

பெருந்தலைவர் காமராஜர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த முக்தாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தலைவரின் நற்பெயருக்கு களங்கம் கற்பித்து, பல ஆதாரமற்ற கருத்துகளையும், பொய் குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்த யூடியூபர் முக்தார் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

தமிழக வளர்ச்சிக்க அடித்தளமட்டு 1954 - 1963 வரை 9 ஆண்டுகள் தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒப்பற்ற தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குறித்து முக்தாரின் மகாந்திரம் இல்லாத கருத்து பதிவிற்கு இன்று வரை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் செயல் கண்டனத்திற்குரியது.

சமூக வலைதளங்களின் தாக்கத்தால் இன்றைய சமூகத்தில் உண்மைக்க புறம்பான செயல்கள் பெரும்பாலும் வலம் வருவதை எண்ணி சமுதாய மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளார்கள். இதற்கு முற்றுப்புள்ள வைக்கும் விதமாக தமிழக அரசு உடனடியாக முக்தார் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அனைவரையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம்.

வரலாற்றை திரிக்க முயலும் நபர்கள் மீதும், யூடியூப் சேனல் மீதும் தண்டனைக்குரிய குற்றம் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்பதை சுட்டிக்காட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்
Tamil News Live today 08 December 2025: முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை