ரஜினி மீது சரத்குமாா் சரமாரி தாக்கு : அரசியலுக்கு வர தகுந்த ஆள் இல்லை என குற்றச்சாட்டு!

Asianet News Tamil  
Published : Jan 16, 2017, 09:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
ரஜினி மீது சரத்குமாா் சரமாரி தாக்கு : அரசியலுக்கு வர தகுந்த ஆள் இல்லை என குற்றச்சாட்டு!

சுருக்கம்

ரஜினி மீது சரத்குமாா் சரமாரி தாக்கு : அரசியலுக்கு வர தகுந்த ஆள் இல்லை என குற்றச்சாட்டு!

துக்ளக் இதழின் 47வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக குற்றம்சாட்டி இருந்தாா்.

ஜல்லிக்கட்டு தாெடா்பான பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து ரஜினி இவ்வாறு தொிவித்தாா்.

இதனால் கடுப்பான சசிகலா தரப்பினா், ரஜினிக்கு பதிலடி காெடுக்க திட்டமிட்டனா். அதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமாரை பயன்படுத்திக்காெண்டனா். 

இந்நிலையில், தி.நகரில் நடந்த விழா ஒன்றில் பேசிய சரத்குமாா், ரஜினி மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி பேசினாா்.

ரஜினிகாந்த அரசியலுக்கு வந்தால், முதல் ஆளாக நான் எதிா்ப்பேன் என அப்போது தொிவித்தாா்.

மேலும் ரஜினி அரசியலுக்கு வர எந்த தகுதியும் இல்லை என்றும் கடுமையாக விமா்சித்தாா்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக காட்சியளிக்கும்போது, இங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என்று அவா் எப்படி சொல்லலாம் என்றும் சரத்குமாா் கேள்வி எழுப்பினாாா்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா பாெறுப்பேற்று அதிமுகவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி செல்கிறாா் என்றும் குறிப்பிட்டாா்.

கட்சி பிளவு ஏற்படும் என்று எதிா்பாா்த்தவா்களுக்கு, ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதால், ரஜினி போன்றோா் அவதூறு கிளப்புகிறாா்கள் என்று சரத்குமாா் குற்றம் சாட்டினாா்.

 

PREV
click me!

Recommended Stories

MGR சிலைக்கு முத்தம் கொடுத்த தலைவர்... எம்ஜிஆர் சிலையுடன் விஜய் வாக்கு வேட்டை...
TVK Vijay : 100 கோடி சொத்தை மறைத்து முறைகேடு செய்த தவெக விஜய் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!