முதன்முறையாக 360 டிகிரி கோண கேமரா கண்காணிப்புடன் நடைப்பெற்ற திருவிழா…

Asianet News Tamil  
Published : Jan 16, 2017, 09:01 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
முதன்முறையாக 360 டிகிரி கோண கேமரா கண்காணிப்புடன் நடைப்பெற்ற திருவிழா…

சுருக்கம்

சரவணம்பட்டி,

கோவையில், மாட்டுப் பொங்கல் அன்று முதன்முறையாக 360 டிகிரி கோண கேமரா கண்காணிப்புடன் மருதாசலக்கடவுள் கோவிலில் பூப்பறிக்கும் திருவிழா நடைப்பெற்றது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேட்டில் உள்ள இரத்தினகிரி மலையில் மருதாசலக்கடவுள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று பூப்பறிக்கும் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு பூப்பறிக்கும் விழாவையொட்டி நேற்று இரத்தினகிரி மலையில் உள்ள முருகப்பெருமானுக்கு 16 வகை திரவிய அபிசேகங்கள் செய்து சிறப்பு பூசைகள் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரத்தினகிரி மலையைச் சுற்றியுள்ள சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி, குரும்பபாளையம், கோவில்பாளையம், கள்ளிப்பாளையம், கீரணத்தம், எஸ்.எஸ்.குளம், வெள்ளாணைப்பட்டி, வெள்ளமடை, அக்ரஹார சாமக்குளம் உள்பட 21 கிராம மக்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து, இரவு 8 மணி வரை சிறப்பாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.

இங்கு மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வருவதையொட்டி, நீர் மோர் பந்தல், கரும்பு, உணவு வகைகள், பொருட்காட்சி, விளையாட்டு பொருட்கள் விற்பனை என மலையைச் சுற்றி பொங்கல் விழா களைகட்டியது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செல்வராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதையொட்டி, 21 கிராம மக்களும் கூடுவதால் அங்கு தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு கோவை மாநகர கிழக்கு மண்டல உதவி ஆணையர் சுந்தர்ராஜன், சரவணம்பட்டி குற்றப்பிரிவு ஆய்வாளர் கீதா ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் 4 திசைகளிலும் கண்காணிக்கப்படும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வேன் முதன்முறையாக கொண்டுவரப்பட்டது. இந்த வேன் மூலம் 360 டிகிரி கோணத்தில் 4 திசைகளும் கண்காணிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு பணியை காவலாளர்கள் செய்திருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay: இம்மாத இறுதியில் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..! பிரதமருடன் முக்கிய சந்திப்பு..
“திசை திருப்பும் அரசியல் செய்யாதீங்க” ஆதவ் அர்ஜூனாவுக்கு சிவசங்கர் கடும் எச்சரிக்கை!