தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் ஜெ.சங்குமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் ஜெ.சங்குமணியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குநராக இருந்த ஆர்.சாந்திமலர் ஓய்வு பெற்றதையடுத்து, விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ள டாக்டர் சங்குமணி பதவி உயர்வில் மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவக் கல்வி இயக்குநராக (டிஎம்இ) இருந்த டாக்டர் நாராயணபாபு கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும், மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராகவும் இருந்த டாக்டர் ஆர்.சாந்திமலர், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
டெஸ்லா தொழிற்சாலைக்கு பியூஷ் கோயல் விசிட்: மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!
இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக இருந்த ஆர்.சாந்திமலர் ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பதவிக்கு விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ள டாக்டர் சங்குமணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார். அவர், இப்பதவியில் ஓராண்டுக்கு இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.