பைக் வீலிங் செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட 13 பேரை கைது செய்த போலீசார், அவர்களின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பைக் வீலிங் கைது
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே பைக்கில் வீலிங் செய்து அதனை வீடியோவா எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது வாடிக்கையாக உள்ளது. இது போன்று பொது வெளியில் சாகசம் ஈடுபடுவதால் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையானது பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்டது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பைக்கில் சாகசம் செய்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் மட்டும் 13 பேர் கைது செய்து அவர்களின் இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் பொது வெளியில் பைக்கில் சாகசம் செய்த 13 பேரின் லைசென்சை ரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்
இது தொடர்பாக திருச்சி காவல் ஆணையர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், திருச்சி மாவட்ட புறவழிச்சாலைகளில் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சாகசம் செய்வதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், இதுவரை 4 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து 9 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சியில் 13 பேர் கைது
ஜீயபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளம் அருகே இரு சக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட பர்ஷத், காணக்கிளியநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தச்சங்குறிச்சி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த அஜித், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சிறுமருதூர் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த அஜய், மணிகண்டன், சக்திவேல், விஜய் ஆகியோரின் இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்து 9 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் கண்காணிப்பு
மேலும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை வீடியோவாக Instagram, x (Twitter), Facebook & Youtube போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை கண்காணிக்க சமூக வலைத்தள கண்காணிப்பு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ததை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களை பகிர்பவர்களை சைபர் கிரைம் போலீஸார் மூலம் கண்காணிக்கப்பட்டு அதன் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்கண்டவாறு, இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு. சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்க அனுப்ப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் உரிமம் ரத்து
அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டே நாட்களில் 13 பேரின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்த போலீசார் பரிந்துரை செய்த்ததை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்
இதையும் படியுங்கள்
போதை அதிகமானா மூஞ்சி மேலயாடா பட்டாசு போடுவீங்க? ஆசாமிகளின் அட்டூழியத்தால் மக்கள் அச்சம்