கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்குள் காவி கொடியுடன் நுழைந்த சங் பரிவார் அமைப்பினர் - வைரல் வீடியோ கிளப்பிய சர்ச்சை

By Raghupati RFirst Published Oct 3, 2022, 6:13 PM IST
Highlights

கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்குள் காவி கொடியுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு ஆராதனையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரியில் லண்டன் மிஷன் சபை கடந்த 30 வருடங்களாக வீரபகுபதி என்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதனை சீர்க்குலைக்கும் நோக்குடனும், மத கலவரத்தை குமரி மாவட்டத்தில் ஏற்படுத்தி விட வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் அமைதியாக நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை பிராத்தனை நடைபெற்று கொண்டிருந்த போது RSS, பாஜக, இந்து முன்னணி குண்டர்கள் சர்ச்சினுள் புகுந்து ரகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே போன்று பூஜை நடைபெறும் போது அத்துமீறி உள்ளே புகுந்து எந்த கிறிஸ்தவனாவது பிரச்சனை செய்வார்களா ? இல்லை சர்ச்சினுள், மசூதியினுள் நுழைந்து எந்த இந்துவாவது பிரச்சனை செய்வார்களா ? RSS, BJP, இந்து முன்னணிக்கு மட்டும் ஏன் இந்த கீழ்தரமான வேலை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். குமரி மாவட்டத்தின் அமைதியை சீர்க்குலைக்கும் இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது? இந்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருவதால் குமரி மாவட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்டம் அருகே வழிபாட்டு தலத்திற்குள்*

* கொடியுடன் புகுந்த மர்ம நபர், ஆராதனை செய்து கொண்டிருந்தவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.* மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது* pic.twitter.com/FRvR5ZJ8S8

— Nowshath A (@Nousa_journo)

கிறிஸ்துவ வழிபாட்டு தலத்திற்குள் சென்ற சங் பரிவார் அமைப்பினர், ஆராதனை செய்து கொண்டிருந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

click me!