அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தனியார் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட பரோட்டா சாப்பிடும் போட்டியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த பொட்டகொல்லை கிராமத்தில் மச்சான்ஸ் கறி என்ற தனியார் அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. கடை திறக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பரோட்டோ சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே போட்டி நடத்தப்படும் என்று உணவகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
விடுமுறையில் சிறப்பு வகுப்பா ? தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை !
அதன்படி 30 நிமிடங்களுக்குள் 10 பரோட்டா சாப்பிடுபவர்களுக்கு உணவகம் சார்பில் ரூ.100 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். மேலும் சாப்பிட்ட பரோட்டாவிற்கும் காசு கொடுக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி பரோட்டா சாப்பிடும் போது வாந்தி எடுக்கக் கூடாது, சரியாக 30 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
போட்டி குறித்து கேள்விப்பட்ட அக்கம் பக்கத்து கிராம இளைஞர்கள் வரிந்து கட்டிக் கொண்டு கூட்டம் கூட்டமாக போட்டியில் பங்கேற்றனர். பெரும்பாலான இளைஞர்களுக்கு 4, 5 புரோட்டா சாப்பிடுவதற்கே நாக்குத் தள்ளியதால் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினர். இருப்பினும் ஒருசில இளைஞர்கள் உணவகம் விதித்த நிபந்தனைகளுடன் பரோட்டாவை சாப்பிட்டு முடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு அறிவித்தபடி ரூ.100 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
குண்டு வீச மாட்டோம்.. பாட்டிலில் பெட்ரோல் வேண்டும்.. விவசாயிகள் போராட்டம்
வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில் நடிகர் சூரி பரோட்டா சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட காட்சி மிகவும் பிரபலமானதைத் தொடர்ந்து பல பகுதிகளிலும் இதுபோன்ற பரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெறுகிறது.