
தென்மாநில மக்களின் உணவுத் தேவைக்கு ஏற்ப, உப்பு போதிய அளவில் இருப்பில் உள்ளதாக தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே குஜராத்துக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக எழுந்த பிரச்னையால், வடமாநிலங்களில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் எழுந்தவண்ணம் உள்ளன.
எனினும், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 23 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், விற்பனை செய்யப்பட்ட பின், 12 லட்சம் டன் உப்பு இருப்பில் உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்மாநிலங்களின் உணவுத் தேவைக்கு பயன்படும் உப்பு இருப்பில் வைக்கப்பட்டிருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.