
ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66, 130 தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் கடந்த மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட அறிவிப்புகளும், புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. சட்டப்பேரவை கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மீதான மானிய கோரிக்கையில் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஐ. பெரியசாமி வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க..iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!
ஊரகப் பகுதிகளில் ரூபாய் ஆயிரம் கோடி செலவில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் 70 லட்சம் மரக்கன்றுகள் ரூபாய் 275 கோடி செலவில் நடப்படும் என்றும் அமைச்சர் அறிவித்திருந்தார்.
மேலும், ஊரக பகுதிகளில் பணியாற்றி வரும் சுமார் 66, 130 தூய்மை காவலர்களின் மாதாந்திர ஓய்வு மதிப்பூதியம் ரூபாய் 3600ல் இருந்து ரூபாய் 5000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பன உட்பட மொத்தம் 15 அறிவிப்புகளை அமைச்சர் அப்போது அறிவித்திருந்தார்.
அமைச்சரின் அறிவிப்பு தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. அவர் அறிவித்தபடியே, தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!