"நான் ரஜினிக்கு ஆதரவு அளிக்கிறேனா?" - விழுந்து விழுந்து சிரிக்கும் சகாயம் ஐஏஎஸ்

 
Published : May 22, 2017, 10:26 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
"நான் ரஜினிக்கு ஆதரவு அளிக்கிறேனா?" - விழுந்து விழுந்து சிரிக்கும் சகாயம் ஐஏஎஸ்

சுருக்கம்

sagayam talks about rajinikanth politics

நடிகர் ரஜினிகாந்திற்கு ஆதரவளித்துள்ளதாக சமூகவலைதளங்களில் வெளியாகி வரும் பதிவுகளுக்கு ஐஏஎஸ் சகாயம் மறுப்புத் தெரிவித்துளளார். 

கடந்த 15 ஆம் தேதி முதல்  19 ஆம் தேதி வரை நடிகர் ரஜினிகாந்த் தனது  ரசிகர்களை சந்தித்துப் பேசினார். இந்த கூட்டத்தில் அரசியல் பிரவேசம் பற்றி பேசினார். 

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அரசியலில் குதித்தால் எந்த கட்சியில் சேருவார்?, அல்லது புது கட்சி தொடங்குவாரா ? என தமிழகத்தில் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது. 

இதனிடையே  ரஜினியை தங்கள் கட்சி வசம் இழுக்க பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் ரஜினிக்கு ஆதரவளித்துள்ளதாக சமூகவலைதளங்களில் பதிவுகள் வைரலாக பரவி வந்தது. 

இந்த சர்ச்சை பதிவுகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் , தமிழ்ச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகிறேன் என தெரிவித்தார்.

ரஜினிகாந்துக்கு நான் ஆதரவளிப்பதாக பரவும் தகவல்கள் உண்மையல்ல என மிகத் தெளிவாக தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!